புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 6 ஜூன் 2023 (08:21 IST)

மணிக்கு 220 கிமீ வேகம்: சென்னை - பெங்களூரு இடையே புதிய அதிவேக ரயில்..!

Train
ஏற்கனவே சென்னை பெங்களூர் இடையே வந்தே பாரத், டபுள் டக்கர் உள்பட பல அதிவேக ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு புதிய அதிவேக ரயில் இயக்க திடமிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 
 
சென்னை பெங்களூர் இடையே புதிய அதிவேக ரயில் சேவையை தொடங்குவது குறித்து ரயில்வே அமைச்சகம் ஆய்வு செய்து வருவதாகவும் இது குறித்து இறுதி வழித்தட ஆய்வை மேற்கொண்டு இதற்கான டெண்டரும் விடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. 
 
அதிகபட்சமாக சென்னை பெங்களூர் வழிதடத்தில் மணிக்கு 200 கிலோமீட்டர் வேகத்தில் ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இதனால் பயண நேரம் இரண்டு மணி நேரம் குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த ரயில் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva