ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 5 ஜூன் 2023 (21:03 IST)

ஒடிஷா ரயில் விபத்து: 230 கிமீ தூரம் பயணித்து மகனை காப்பாற்றிய தந்தை!

ஒடிஷாவில் கடந்த 2 ஆம் தேதி இரவில் பெங்களூரு - ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், ஷாலிமார்- சென்டிரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், மற்றும் சரக்கு ரயில் 3 ரயில்களும் விபத்தில் சிக்கியது. இதில்,  275 பேர் உயிரிழந்தனர். 1000 க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு, சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கும் பணிகள் தீவிரமாக  நடைபெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் ஹவுராவைச் சேர்ந்த பிஸ்வஜித்தின் தந்தை ஹெலராம் மாலிக், கடந்த வெள்ளிக்கிழமை ரயில் விபத்து செய்தியை அறிந்து தன் மகனை செல்போனில் அழைத்துப் பேசியுள்ளார்.  சில நிமிடங்கள் பேசிய மட்டுமே பேசிய பிஸ்வஜித் தந்தையிடம் பலவீனமாகப் பேசியுள்ளார்.

இதனால் ரயில் விபத்தில் தன் மகனும் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று உறுதி செய்து கொண்ட் ஹெலராம், அன்றிரவு ஒரு ஆம்புலன்ஸில் இருந்து பாலசோருக்குப் புறப்பட்டார்.

230 கிமீ தூரம் பயணித்து சம்பவ இடத்திற்குச் சென்ற அவரால் மகன் பிஸ்வஜித்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர், பஹானாகா உயர் நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக சவக்கிடங்கிற்குச் சென்றார். அங்கு பல உடல்கள் வைக்கப்பட்டிருந்த நிலையில், பிஸ்வஜித் மயக்கம் அடைந்த  நிலையில் இருப்பதைக் கண்டுபிடித்தார்.

தன் மகன் உயிருடன் இருப்பதை அதிகாரிகளுக்கு தெரிவித்தார். ஆதன்பின்னர், ஆம்புலன்ஸ் மூலம் கட்டாக் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி மருத்துவர்கள் கூறினர். தற்போது கல்கத்தாவில்  உள்ள எஸ்.எஸ்.கே.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம்  நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.