வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 15 மே 2023 (16:15 IST)

சென்னை - பெங்களூர் டபுள் டெக்கர் ரயில் தடம் புரண்டு விபத்து! பயணிகளுக்கு பாதிப்பா?

சென்னை மற்றும் பெங்களூர் இடையே தினமும் இயங்கி வரும் டபுள் டக்கர் ரயில் இன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
சென்னை மற்றும் பெங்களூர் இடையே இயங்கி வரும் டபுள் டக்கர் ரயில் முழுக்க முழுக்க ஏசி என்பது மட்டுமின்றி இரண்டு அடுக்கு ரயில் என்பதால் இதில் பயணிகள் மிகுந்த விருப்பத்துடன் பயணம் செய்து வருவார்கள். தினசரி இந்த ரயில் முழு அளவில் பயணிகளுடன் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் சென்னையிலிருந்து இன்று காலை பெங்களூர் சென்ற டபுள் டக்கர் ரயில் திடீரென தடம் புரண்டு உபத்துக்குள்ளானது. தமிழ்நாடு கர்நாடக எல்லையில் உள்ள பிசாநத்தம் என்ற இடத்தில் ரயிலின் சீ1 பெட்டி திடீரென தடம் புரண்டது. ஆனால் இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. 
தடம்புரண்ட பெட்டியை மீண்டும் சரி செய்ய ரயில்வே ஊழியர்கள் தீவிரமாக இருப்பதாகவும் இன்னும் ஒரு சில மணி நேரத்தில் அந்த பணி முடிந்து விடும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Siva