1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Chennai koyambedu private bus station will changed?

சென்னை கோயம்பேடு தனியார் பேருந்து முனையம் மாற்றப்படுகிறதா? சி.எம்.டி.ஏ. திட்டம்!

கோயம்பேடு
சென்னை கோயம்பேடு பகுதியில் அரசு பேருந்துகளுக்கு தனியாக ஒரு பேருந்து நிலையமும் தனியார் பேருந்துகளுக்கு ஒரு பேருந்து நிலையமும் உள்ளது என்பது தெரிந்ததே. 
 
இந்த நிலையில் சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கோயம்பேடு பகுதியில் உள்ள தனியார் பேருந்து முனையத்தை சென்னைக்கு வெளியே மாற்ற சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
 
ஒரே இடத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் சென்னையை நோக்கி வருவதும் சென்னையில் இருந்து கிளம்புவதுமாக இருப்பதால் நான் அதிகப்படியான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில் கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வரதராஜபுரத்தில் தனியார் பேருந்து நிலையத்தை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து வருவதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
தங்கம், வெள்ளி விலையில் இன்று என்ன மாற்றம்? சென்னையில் இன்றைய நிலவரம்..!