திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 14 மே 2023 (21:29 IST)

செஞ்சுரி அடித்த ஜெய்ஸ்வால் டக்-அவுட்.. வெளியேறுகிறது ராஜஸ்தான் ..!

Yashasvi Jaiswal
ஐபிஎல் தொடரின் 60வது போட்டி இன்று ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது என்பதும் இந்த போட்டியில் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இன்றைய போட்டியில் வெல்லும் அணி அடுத்த சுற்று செல்லும் வாய்ப்பு உள்ளது என்பதும் தோல்வி அடையும் அணி தொடரிலிருந்து வெளியேற வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்பட்டது. 
 
இந்த நிலையில் இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி ஐந்து விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் அடித்தது. டூபிளஸ்சிஸ் மற்றும் மாக்ஸ்வெல் ஆகிய இருவரும் அரைசதம் அடித்தனர்.. 
 
இந்த நிலையில் 172 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடு வரும் ராஜஸ்தான் அணி மோசமாக பேட்டிங் செய்து 5 ஓவர்களில் நான்கு விக்கெட்டுக்களை இழந்து வெறும் 27 ரன்கள் மட்டுமே அடித்துள்ளது. கடந்த போட்டியில் முதல் ஓவரில் 26 ரன்கள் அடித்து அபாரமாக செஞ்சுரி அடித்த ஜெய் ஸ்வால் இன்று இரண்டாவது பந்திலேயே டக் அவுட்  ஆகிவிட்டார். 
 
அதேபோல் அதிரடி பேட்ஸ்மேன் ஜாஸ் பட்லரும் டக் அவுட் ஆகிவிட்டார் என்பதும் கேப்டன் சஞ்சு சாம்சன் 4   ரன்களில் அவுட் ஆகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
Edited by Siva