1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 15 மே 2023 (13:17 IST)

சென்னையில் 105 டிகிரியை தாண்டியது வெயில்.. பொதுமக்கள் கடும் அவதி...!

சென்னையில் 105 அடி வெயில் அடித்துக் கொண்டிருப்பதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
 
கடந்த சில நாட்களாக சென்னையில் அதிகபட்ச வெயில் அடித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் சென்னையில் இன்று நண்பர்கள் 12 மணிக்கு நுங்கம்பாக்கத்தில் 105 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. மேலும் இது 106 டிகிரி வரை தொடர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
நேற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் 105 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது என்பதும் மீனம்பாக்கத்தில் 105 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று நேற்றை விட அதிகமாக வெப்பம் பதிவாக வாய்ப்பிருப்பதால் பொதுமக்கள் மிகுந்த ஜாக்கிரதையுடன் நடந்து கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இன்னும் இரண்டு வாரங்களுக்கு சென்னையில் அதிபயங்கரமாக வெயிலடிக்கும் என்று கூறப்படுகிறது
 
Edited by Siva