1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Chennai Apollo Hospital introduced Helicopter Ambulance

சென்னையில் பறக்கும் ஆம்புலன்ஸ் அறிமுகம்

சென்னை
சென்னையில் முதல்முறையாக ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவையை அப்பல்லோ மருத்துவமனை அறிமுகம் செய்துள்ளது.


 

 
உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு இறந்தவர்களின் உறுப்புகளை குறிப்பிட்ட நேரத்துக்குள் பொருத்த வேண்டும். இறந்த ஒருவரின் உடல் உறுப்பை தொலைவில் இருந்து எடுத்து வருவது மிகவும் சிரமம். தரை வழியாக குறிப்பிட்ட நேரத்துக்குள் இதை செய்து முடிப்பது சவாலான ஒன்றாக இருந்தாலும் எல்லா சமயங்களிலும் சாத்தியம் ஆகாது.
 
இதனால் அப்பல்லோ மருத்துவமனை அவசர காலத்துக்கு வான்வழி ஆம்புலன்ஸ் சேவையை அறிமுகம் செய்துள்ளது. சென்னையில் முதல்முறையாக ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவையை அறிமுகம் செய்துள்ளது. இந்த சேவையை துவங்கி வைத்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவையை கொண்டு வர தமிழக அரசும் பரிசீலனை செய்யும் என தெரிவித்தார்.
About Writer
Abimukatheesh
அடுத்த கட்டுரையில்
சனிக்கோளின் விடியல் புகைப்படத்தை வெளியிட்ட நாசா