1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. chennai and pondichery facing gas cylinder issue

கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு!.. சென்னை, புதுச்சேரியில் ஹோட்டல்கள் மூடப்படும் அபாயம்...

gas
உலகின் பல நாடுகளுக்கும் கச்சா எண்ணெய் ஈரான் நாட்டின் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் போர் தொடுத்து வருகிறது. இதையடுத்து ஈரான் வளைகுடா நாடுகளையும் தாக்கி வருகிறது.. இதன் காரணமாக இந்தியாவில் கச்சா எண்ணெய் விநியோகம் தடைபட்டிருக்கிறது
.. கச்சா எண்ணெய் தட்டுப்பாடு காரணமாக எரிபொருட்களான கேஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல் ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு நிலவும் என எதிர்பார்க்கப்பட்டது. இப்போதுவரை பெட்ரோ, டீசலுக்கு பிரச்சனை இல்லை என்றாலும் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.

இந்தியாவில் பல மாவட்ட மாநிலங்களிலும் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு நிலவுகிறது.. இதனால் வணிக சிலிண்டரை பயன்படுத்தும் ஹோட்டல்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. ஏற்கனவே பெங்களூரில் இன்று ஹோட்டல்கள் மூடப்பட்டது. அதேபோல், மதுரை, கோவை, போன்ற மாவட்டங்களில் மூன்று நாட்களில் ஹோட்டல்கள் மூடப்படும் நிலை உருவாகியிருக்கிறது.

இந்நிலையில்தான், சென்னை, புதுச்சேரியில் வணிக சிலிண்டர் வினியோகம் நிறுத்தப்பட்டிருக்கிறது. எனவே, சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக அங்கு ஹோட்டல்கள் மூடப்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது. சென்னை மற்றும் புதுச்சேரியில் இன்றே உணவு சமைக்க பல ஹோட்டல்களிலும் கேஸ் சிலிண்டர் இல்லை என்கிற நிலை ஏற்பட்டிருக்கிறது.

வெளிமாவட்டங்களிலிருந்து சென்னையில் வசிக்கும் பெரும்பாலானோர் ஹோட்டல் உணவைத்தான் நம்பியிருக்கும் நிலையில், ஹோட்டல்கள் மூடப்பட்டால் அவர்களுக்கு உணவு கிடைக்காத அபாயம் ஏற்படவுள்ளது. இப்போதுள்ள நிலை நீடித்தால் சென்னை, புதுச்சேரியில் நாளை முதல் ஹோட்டல்கள் இயங்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.
About Writer
BALA
அடுத்த கட்டுரையில்
12-ஆம் வகுப்பு கணிதத் தேர்வு.. QR குறியீட்டை ஸ்கேன் செய்தால் ஹாலிவுட் பாடல் ஒலித்ததா? சிபிஎஸ்இ விளக்கம்