சிலிண்டர் தட்டுப்பாடு!.. ஹோட்டல்கள் மூடப்படும் நிலை!.. ஸ்டாலின் முக்கிய ஆலோசனை
ஈரான் போர் காரணமாக உலகெங்கும் கச்சா எண்ணெய் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.. குறிப்பாக இந்தியாவில் ஹோட்டல்களுக்கு கொடுக்கப்படும் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இதனால், இந்தியாவில் பல மாநிலங்களிலும் ஹோட்டல் வியாபாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது..
இன்று காலை மதுரையில் செய்தியாளரிடம் பேசிய தமிழக ஹோட்டல் சங்கத் தலைவர் இப்படியே போனால் ஹோட்டலை மூடும் நிலை ஏற்படும்.. மதுரையில் பெரும்பாலான ஹோட்டல்கள் கேஸ் சிலிண்டர் நம்பித்தான் இயங்குகிறது. ஆனால், சிலிண்டர் கிடைக்கவில்லை என்று கூறியிருந்தார்..
ஒருபக்கம் கோவையிலும் சிலிண்டர் கிடைக்காததால் ஹோட்டல் தொழில் பாதிப்படைந்திருக்கிறது.. இதை பயன்படுத்தி வணிக சிலிண்டரை சிலர் பிளாக்கில் அதிக விலைக்கு விற்கிறார்கள்.. அதுவும் தற்போது கிடைக்கவில்லை என செய்திகள் வெளியானது. இதையத்து, பல ஹோட்டல்களில் உணவு பட்டியலில் பல உணவுகளை குறைக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
இந்நிலையில்தான், தமிழக முதல்வர் ஸ்டாலின் அதிகாரிளிடம் சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார். ஏற்கனவே வணிக சங்கத்தினரிடம் ஆலோசனை நடத்திய அவர், தற்போது அதிகாரிகளுடன் பேசி வருகிறார். தமிழகத்தில் வசிக்கும் மக்களுக்கும், வணிகர்களுக்கும் தங்கு தடையின்றி கேஸ் சிலிண்டர் வினியோகம் செய்வது பற்றியும், அதற்கான நடவடிக்கைகள் பற்றியும் அவர் ஆலோசனை செய்து வருகிறார்.