சென்னை விமான நிலையம் தனியாருக்கு குத்தகை: விமான போக்குவரத்து அமைச்சகம்
சென்னை உள்பட 25 விமான நிலையங்களை தனியாருக்கு குத்தகைக்கு விடப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே பல விமான நிறுவனங்கள் தனியார் வசம் இருக்கும் நிலையில் வரும் 2025ம் ஆண்டுக்குள் சென்னை மதுரை திருச்சி உள்பட 25 விமான நிலையங்கள் தனியாருக்கு குத்தகைக்கு விடப்படும் என விமான போக்குவரத்து துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்
விமான நிலைய செயல்பாடுகள், பராமரிப்பு உள்ளிட்ட பணிகளை குத்தகைக்கு எடுத்த நிறுவனங்கள் மேற்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதற்கு எதிராக போராட்டங்கள் நடத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
Edited by Siva