வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 18 டிசம்பர் 2022 (16:11 IST)

சென்னை தீவுத்திடலில் திறந்தவெளி திரையரங்கம்: விரைவில் திறக்க ஏற்பாடு!

open theater
சென்னை தீவுத்திடலில் திறந்தவெளி திரையரங்கம்: விரைவில் திறக்க ஏற்பாடு!
சென்னை தீவு திடலில் திறந்தவெளி திரையரங்கு மற்றும் டிரைவ்-இன் உணவகம் அமைக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் இது பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
சென்னை தீவுத்திடலில் ஒவ்வொரு வருடமும் சுற்றுலா பொருட்காட்சி நடைபெறும் என்பதும் அந்த பொருட்காட்சி ஏராளமான பேர் வருவார்கள் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது சென்னை தீவுத்திடலில் சுற்றுலா துறை அமைத்து வரும் திறந்தவெளி திரையரங்கம் மற்றும் டிரைவ்-இன் உணவகம் குறித்த பணிகள் நடைபெற்று வருகின்றன. 
 
இந்த பணிகள் தற்போது முழுவீச்சில் நடந்து வரும் நிலையில் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திறந்தவெளி திரையரங்கம் மற்றும் டிரைவ்-இன்  உணவகம் திறக்கப்பட்டால் சென்னை மக்களுக்கு மிகப் பெரிய பொழுதுபோக்கு அம்சமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva