வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 8 நவம்பர் 2021 (13:48 IST)

கனமழை எதிரொலி: ஆதம்பாக்கம் காவல் நிலையம் தற்காலிக இடமாற்றம்!

கனமழை காரணமாக ஆதம்பாக்கம் காவல் நிலையம் தற்காலிகமாக இடம் மாற்றம் செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
கடந்த 2 நாட்களுக்கும் மேலாக சென்னையில் கன மழை தொடர்ந்து பெய்து வருகிறது என்பதும் இதனால் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் கன மழை காரணமாக சென்னை ஆதம்பாக்கம் காவல் நிலையத்திற்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இதனை அடுத்து சென்னை ஆதம்பாக்கம் புது காலனி மெயின் ரோடு என்ற முகவரியில் இயங்கி வந்த ஆதம்பாக்கம் காவல் நிலைய வளாகம், புது காலனி 2வது தெரு பழைய எண் 39 புதிய எண் 12 என்ற முகவரியில் உள்ள முதல் தளத்தில் மாற்றப்பட்டு உள்ளது என்றும் பொதுமக்கள் அவசர உதவிக்கு ஆதம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் வளர்மதி அவர்களின் தொலைபேசி எண் 94449 70832 மற்றும் ஆதம்பாக்கம் காவல் நிலைய தொலைபேசி எண் 94981 00161 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது