வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 13 ஆகஸ்ட் 2021 (18:16 IST)

டுவிட்டரின் இந்திய பிரிவு அதிகாரி திடீர் இடமாற்றம்!

டுவிட்டர் நிறுவனத்தின் இந்தியப் பிரிவு அதிகாரி திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கடந்த சில மாதங்களாக டுவிட்டர் நிறுவனம் ஒரு தலைப்பட்சமாக செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக ராகுல் காந்தியின் டுவிட்டர் பக்கம் முடக்கப்பட்டது மற்றும் காங்கிரஸ் கட்சியின் டுவிட்டர் பக்கம் உள்பட சுமார் 5000 பேர்களின் ட்விட்டர் பக்கங்கள் முடக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
இந்த நிலையில் டுவிட்டர் நிறுவனம் மத்திய அரசுக்கு சார்பாக நடந்து கொள்வதாகவும் நடுநிலையாக இல்லை என்றும் காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டினர். இந்த குற்றச்சாட்டு டுவிட்டர் நிர்வாகிகள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் தகவலின்படி டுவிட்டர் நிறுவனத்தின் இந்தியப் பிரிவு அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக வேறு புதிய அதிகாரி விரைவில் நியமிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது