செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 31 டிசம்பர் 2021 (16:09 IST)

தமிழகத்தில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் நேற்று ஒரு சில இடங்களில் மழை பெய்த நிலையில், இன்றும் ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது:

மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, சேலம், பெரம்பூர், அரியலூர், திருச்சி, கரூர்,  சிவகங்கை, புதுக்கோடை மற்றும் புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.