1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tamilnadu have rains coming 2 days

இன்றும், நாளையும் கனமழை வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம்!

Tamilnadu
தமிழகத்தில் வளிமண்டல சுழற்சியால் மழை பெய்து வரும் நிலையில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக நேற்று முதலாக பல இடங்களில் கனமழை பெய்ய தொடங்கியுள்ளது. சென்னையில் நேற்று தொடர்ந்து பெய்த கனமழையால் பல இடங்களில் நீர் தேங்கியதால் சுரங்க பாதைகள் மூடப்பட்டன.

இந்நிலையில் இன்று டெல்டா மாவட்டங்கள், கடற்கரையோர மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. மேலும் இன்றும், நாளையும் நாகப்பட்டிணம், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், புதுச்சேரி மற்றும் காரைகாலில் பல இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு நீதிபதி… அறிமுகப்படுத்திய சீனா!