1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 21 நவம்பர் 2021 (14:19 IST)

சென்னை வந்தது ஆய்வுக்குழு: இன்றும் நாளையும் வெள்ள பாதிப்பு குறித்து ஆய்வு!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்த நிலையில் வெள்ள பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய குழு இன்று சென்னை வரவிருப்பதாக வெளிவந்த தகவலை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த நிலையில் சற்று முன் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய சென்னை வந்ததாகவும் அவர்கள் நாளை முதல் தங்கள் பணியை ஆரம்பிப்பார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது 
 
விவசாயம், நீர்வளம், மின்சாரம், போக்குவரத்து, ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் இந்த குழுவில் இடம்பெற்று உள்ளதாகவும் தமிழகத்தில் வெள்ளம் மற்றும் கனமழையால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து மத்திய அரசுக்கு இந்த குழு அறிக்கை அனுப்புவார்கள் என்றும் தகவல்கள் வெளியாகிஉள்ளது
 
இந்த குழுவின் அறிக்கையின் அடிப்படையில் தான் தமிழகத்திற்கு வெள்ள நிவாரண நிதி மத்திய அரசு வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.