இரண்டாவது முறையாக பதவி ஏற்றுள்ள மோடித் தலைமையிலான அரசு புதியக் கல்விக் கொள்கையின் மூலம் மீண்டும் இந்தியைத் திணிக்க முயல்வதாக வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் பாஜக அரசு 2014 ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்றதும் புதிய கல்விக் கொள்கையை வடிவமப்பதற்கான திட்டக்குழுவை அமைத்தது. இந்த குழு 2016 ஆம் ஆண்டு தனது வரைவை மத்திய அரசிடம் அளித்தது. அந்த வரைவில் கல்வியில் தனியார் மயத்தை ஊக்குவித்தல், கல்லூரிகளுக்குத் தன்னாட்சி...