வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. பாராளுமன்ற தேர்தல் 2019
Written By
Last Modified: புதன், 17 ஏப்ரல் 2019 (20:53 IST)

எல்லாம் வைகோ ராசி –வேலூர் தேர்தல் ரத்தில் வம்பிழுக்கும் எஸ்.வி. சேகர் !

வேலூர் தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு வைகோவின் ராசிதான் காரணம் என்று நடிகர் எஸ் வி சேகர் தெரிவித்துள்ளார்.

பெண் ஊடகவியலாளர்களைப் பற்றி தவறாகப் பேசிய வழக்கில் சில காலம் தலைமறைவாகவும் அதன் பின்னர் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்யநாதனின் ஆதரவால் போலிஸ் பாதுகாப்போடும் உலாவந்த நடிகர் எஸ் வி சேகர் இப்போது தேர்தலை அடுத்து டிவிட்டரில் மீண்டும் பிசியாக வலம்வர ஆரம்பித்துள்ளார்.

சமீபத்தில் வேலூரில் தேர்தலுக்காக பணம் கொடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதில் திமுக வேட்பாளரும் துரைமுருகனின் மகனுமாக கதிர் ஆனந்த் பெயர் அடிபட்டது. அவர் வீட்டில் நடத்திய சோதனைகளாலேயே இந்த தேர்தல் ரத்து செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து தேர்தல் ரத்து குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக அபிமானியான நடிகர் எஸ் வி சேகர் ‘மேட்ச் ஆரம்பிக்கிறத்துக்கு முன்னாடியே முதல் பால் நோ பால்.  எல்லாம் அண்ணன் ராசி’ எனக் கூறி வைகோவும் துரைமுருகனும் இருக்கும் படத்தைப் பகிர்ந்துள்ளார்.