1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Central govt approved for Tamil Nadu lab

சென்னை மரபணு பகுப்பாய்வு கூடத்திற்கு மத்திய அரசு அங்கீகாரம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

பகுப்பாய்வு
சென்னையில் அமைக்கப்பட்டுள்ள மரபணு பகுப்பாய்வு கூடத்திற்கு மத்திய அரசு அங்கீகாரம் கிடைத்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார். 
 
இந்தியாவிலேயே முதல் முறையாக சென்னையில் மரபணு பகுப்பாய்வு கூடம் அமைக்கப்பட்டது என்பது இந்த கூட்டத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் என மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை வைத்தது என்பதும் தெரிந்ததே. 
 
இந்த நிலையில் இந்தியாவிலேயே முதல் முறையாக சென்னையில் அமைக்கப்பட்டுள்ள மரபணு பகுப்பாய்வு கூடத்திற்கு மத்திய அரசு அங்கீகாரம் அளித்துள்ளது என்றும் அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
இதன்மூலம் கொரோனா, ஒமிக்ரான் வைரஸ் உள்ளிட்ட அனைத்து வகை வைரஸ்களை விரைவாக கண்டறிய முடியும் என்றும் சிகிச்சையும் விரைவாக அளிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
அடுத்த கட்டுரையில்
ஜிஎஸ்டி வரிவிதிப்பில் மாற்றம்: புத்தாண்டு முதல் உயரும் பொருட்களின் விலை!