வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 8 ஜனவரி 2021 (17:34 IST)

மத்தியில் இருந்து அப்லாஸ் பெற்ற ஈபிஎஸ் அண்ட் கோ: எதற்கு தெரியுமா?

தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டிருப்பதாக முதல்வர், அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பாராட்டு.

 
நாடு முழுவதும் வருகிற 13-ஆம் தேதி முதல் குரு தடுப்பூசி பயன்பாட்டுக்கு வர உள்ள நிலையில் தமிழக அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக தமிழகம் வந்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனை மற்றும் ஓமந்தூரார் மருத்துவமனை யில் நடைபெற்றுவரும் தடுப்பூசி ஒத்திகை நிகழ்ச்சியினை ஆய்வு செய்தார்.
 
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் சுகாதாரத் துறை மூத்த அதிகாரிகள் ஆகியோர் மத்திய சுகாதாரத் துறை அமைச்சருக்கு தமிழக அரசு சார்பில் கொரனோ தடுப்பூசி வழங்க மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்த விவரங்களை விளக்கினர்.
 
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்ததாவது. பிரதமர் மோடி தலைமையிலான அரசு கொரோனோ நோய்தொற்று முன்னேற்பாடு பணிகளை சிறப்பாக மேற்கொண்டு வருகிறது.
 
அனைத்து மாநிலங்களும் நோய்த் தடுப்புப் பணிகளை திறம்பட மேற்கொண்டு வருகிறது. 2020 ஆம் ஆண்டு முழுவதுமாக பெருந்தொற்று ஆக்கிரமித்த நிலையில் தற்போது நோய் பரவல் , உயிரிழப்புகள்  குறைந்துள்ளது. ஆரம்பத்தில் கொரோனா பிரச்சினை எழுந்தபோது ஒரே ஒரு பரிசோதனை மையத்துடன் துவங்கினோம் ஆனால் தற்போது,
நாடு முழுவதும் தற்போது 2300 பிசிஆர் நானோ பரிசோதனை மையங்கள் உள்ளன. இரவு பகலாக விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில்  கண்டறியப்பட்ட இரண்டு தடுப்பூசிகளும்  பல்வேறு சோதனைகளுக்கு பிறகு அனுமதி அளிக்கபட்டுள்ளது.
 
கோவின் செயலியில் பதிவு செய்த சுகாதாரத் துறை பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்த முதற்கட்டமாக திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த 2ஆம் தேதி நாடு முழுவதும் முதற்கட்டமாக கொரனோ பரிசோதனை ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து இரண்டாவது கட்டமாக நாடு முழுவதும் 125- க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் தடுப்பூசி ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
 
தமிழகத்தில் மட்டுமே 100 சதவீதம் ஆர்டிபிசிஆர் முறையில் கொரோனோ  பரிசோதனை மேற்கொள்ளபடுகிறது. இது பாராட்ட தக்கது. நம்மிடம் தற்போது இரண்டு கொரோனோ தடுப்பூசிகள் அவசரகாலத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. வருங்காலங்களில் நகரம் முதல் கிராமங்கள் வரை தடுப்பூசிகள் வழங்க நடவடிக்கை எடுக்கபடும்.
 
அதிகப்படியான பரிசோதனைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இரண்டு தடுப்பூசிகளுக்கு அவசரகால பயன்பாட்டிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. முதற்கட்டமாக சுகாதாரத் துறை பணிகள் , முன் களப்பணியாளர்கள் அடுத்தபடியாக வயது முதிர்ந்தவர்கள் , நாள்பட்ட உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள், பொதுமக்கள் என முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி பயன்பாட்டிற்கு வர உள்ளது.