திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 8 ஜனவரி 2021 (17:26 IST)

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள் !

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மொத்தம் 16,221 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கலை முன்னிட்டு ஒவ்வொருவரும் தங்கள் சொந்த ஊருக்குச் செல்லுவார்கள்.

எனவே, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மொத்தம் 16,221 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :

வரும் 11 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை 16 221 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும், வரும் 17 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதிவரை 15,270 பேருந்துகள் இயக்கப்படும் என அறிவித்துள்ளார்.

இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.