வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 8 ஜனவரி 2021 (17:10 IST)

மொத்த விமான டிக்கெட்டுகளையும் புக் செய்த நபர்...ஏன் தெரியுமா??

உலகில் சுமார் 6 கோடிக்கும் அதிகமான மக்கள் கொரொனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஒரு நபர்  வைரஸ் தொற்றால் பாதிக்காமல் இருக்க அவர் ஒருவரே ஒரு விமானத்தில் மொத்த டிக்கெட்டையும் வாங்கித் தனியே  பயணித்துள்ளார்.

உலகெங்கும் கொரோனா வைரஸ் ஒரு புரட்டுப் புரட்டிவிட்டது. ஆனால் இதன்  உருமாறிய கொரோனா வைரஸில் இரண்டாம் அலை உலக நாடுகளில் பரவி வருகிறது.

இந்நிலையில் இங்கிலாந்து உள்ளிட்ட சில நாடுகளில்; ஊரடங்கு அமலில் உள்ளது. கடுமையான பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி வருகின்றனர்.

இந்நிலையில், இந்தோனேஷியா நாட்டிலுள்ள ஜக்கார்ட்டாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர்  தானும் தனது மனைவியும் பாலி என்ற பகுதிக்குச் செல்ல அனைத்து டிக்கெட்டுகளையும் புக் செய்து பயணித்துள்ளார். இதற்கான மொத்த செலவு ரூ.5 லட்சத்து 80 ஆயிரம் இருக்கலாம் என தெரிகிறது. இதுகுறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.