1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 26 அக்டோபர் 2020 (18:11 IST)

காவலர்களின் கொடூர தாக்குதலால்தான் இறந்தனர்! – சாத்தான்குளம் விவகாரத்தி சிபிஐ அறிக்கை!

சாத்தான்குளத்தில் செல்போன் கடை உரிமையாளர்கள் இறந்த விவகாரத்தில் அவர்கள் காவலர்களின் மூர்க்கமான தாக்குதலால்தான் இறந்தார்கள் என சிபிஐ தெரிவித்துள்ளது.

சாத்தான்குளம் செல்போன் கடை உரிமையாளர் பெனிக்ஸ் ராஜ் மற்றும் அவரது தந்தை ஆகியோர் விசாரணைக்காக காவல் நிலையம் கொண்டு செல்லப்பட்ட நிலையில் இறந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து சாத்தான்குளம் காவல்நிலையத்தை சேர்ந்த 6 காவலர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்கள்.

இந்நிலையில் இந்த வழக்கு சிபிசிஐடியிடமிருந்து சிபிஐக்கு மாற்றப்பட்டது. இந்த வ்ழக்கின் மீதான தடயங்களை ஆராய்ந்துள்ள சிபிஐ தற்போது உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விரிவான அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அதில் பெனிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஆகியோர் காவல் அதிகாரிகளின் மூர்க்கமான தாக்குதலாலேயே இறந்திருப்பதாகவும், காவல் நிலைய லத்தி, பெஞ்ச் மற்றும் கழிவறை ஆகிய பகுதிகளில் சேகரிக்கப்பட்ட ரத்த மாதிரிகள் பெனிக்ஸ் மற்றும் அவரது தந்தையின் ரத்த மாதிரிகளோடு பொருந்தி போவதாகவும் அந்த அறிக்கையில் சிபிஐ தெரிவித்துள்ளது.