தில் இருந்தா கூட்டணி இல்லைனு சொல்லுங்க.. பாப்போம்! – எடப்பாடியாருக்கு ஸ்டாலின் சவால்
அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.
தமிழகத்தில் அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவ படிப்புகளில் 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்குவது குறித்து தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி ஆளுனர் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. ஆனால் இன்னமும் ஆளுனர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பதை பல்வேறு கட்சிகளும் கண்டித்து வருகின்றன.
இந்நிலையில் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இட ஒதுக்கீடு விவகாரத்தில் அதிமுக அரசு மத்திய அரசிடம் முறையான வாதங்களை வைக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளார். மேலும் “மருத்துவக் கல்வி இடங்களில் இடஒதுக்கீடு வழக்கில் அதிமுக அரசு துணிச்சலுடன் வாதாடவில்லை! அதிமுக - பாஜக கூட்டணி சமூகநீதி மீது தாக்குதலை நடத்துகின்றது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் “இந்த ஆண்டே இட ஒதுக்கீட்டை அமல்படுத்தவில்லையெனில் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என அறிவிக்கும் அளவிற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தைரியம் உள்ளதா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.