புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 26 அக்டோபர் 2020 (16:40 IST)

எல்லா படமும் பொங்கலுக்கு வந்தா என்ன பண்றது? – திரையரங்குகள் கலக்கம்!

கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்ட நிலையில் பெரிய பட்ஜெட் படங்கள் பல பொங்கலை திட்டமிட்டு வெளியாவது திரையரங்குகளை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகள் மூடப்பட்ட நிலையில் இன்னமும் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் பல பெரிய பட்ஜெட் படங்கள் வெளியாவது ஒத்திவைக்கப்பட்ட நிலையில், சிறிய பட்ஜெட் படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகி வருகின்றன. மேலும் சில பெரிய படங்களே ஓடிடி தளங்களுக்கு விற்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் “ஈஸ்வரன்” பொங்கலுக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி கார்த்தி நடிக்கும் “சுல்தான்”, விஜய் நடித்துள்ள “மாஸ்டர்” ஆகியவையும் பொங்கலில் ரிலீஸாக உள்ளன. தியேட்டர்கள் பல நாட்களாக இயங்காமல் உள்ளதால் வருமானம் இழந்துள்ள திரையரங்க உரிமையாளர்கள் திரையரங்குகள் திறக்கப்பட்டால் மட்டுமே இழப்பீடுகளை ஈடு செய்து புதிய படங்களை சிரமமின்றி திரையிட முடியும் என கூறி வருகின்றனர்.

இந்நிலையில் திரையரங்குகள் திறப்பது பற்றிய அறிவிப்புகள் வராத நிலையில் மூன்று பெரிய படங்கள் பொங்கலை திட்டமிட்டு தயாராகி வருவது திரையரங்க உரிமையாளர்களுக்கு பண பிரச்சினையில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.