1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. cbi asked proof for vijay in inquiry

ஆதாரம் கொடுங்க!. விஜயை மிரள வைத்த சிபிஐ அதிகாரிகள். டெல்லியில் நடந்தது என்ன?..

vijay
ஏற்கனவே கடந்த 13ம் தேதி டெல்லி சென்று கரூர் சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரணையில் கலந்து கொண்ட விஜய் இரண்டாம் நாளாக இன்று மீண்டும் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகியிருக்கிறார். அப்போது அவரிடம் சிபிஐ அதிகாரிகள் அடுக்கடுக்கான பல கேள்விகளை கேட்டதாக தெரிகிறது.

முக்கியமாக கரூர் போலீசார் சொன்ன கட்டுப்பாடுகளை சரியாக பின்பற்றினீர்களா?.. ஏன் அவ்வளவு நேரம் தாமதமாக கரூருக்கு சென்றீர்கள்?.. அவ்வளவு கூட்டம் நெரிசல் இருந்தும் ஏன் உங்கள் வாகனத்தை உள்ளே கொண்டு சென்றீர்கள்?.. கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு மக்கள் மயக்கம் அடைந்தபோது அந்த அபாயத்தை நீங்கள் உணரவில்லையா?. அது எப்போது உங்களுக்கு தெரியவந்தது?.. அதை தடுக்கவோ அல்லது மக்களை காப்பாற்றவோ நீங்கள் என்ன முயற்சி செய்தீர்கள்? என்றெல்லாம் பல கேள்விகளை எழுப்பியிருக்கிறார்கள்.  அந்த கேள்விகளுக்கு எல்லாம் விஜய் பதில் அளித்திருக்கிறார்.

இத்தனை கேள்விகளை சிபிஐ அதிகாரிகள் கேட்டாலும் விஜய் சுருக்கமாக ‘நான் தமிழக காவல்துறை நம்பி இருந்தேன். போலீஸ் அதிகாரிகள் இருக்கிறார்கள். அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் இருந்தேன்’ என்று சொல்லியதாக செய்திகள் கசிந்திருக்கிறது.

அதுமட்டுமில்லாமல் சில கேள்விகளுக்கு விஜய் தரப்பில் அவகாசம் கேட்டதாகவும், விஜய் சொன்ன சில பதில்களுக்கு சிபிஐ தரப்பில் ஆதாரம் கேட்டிருப்பதாகவும் தெரிகிறது. வருகிற பிப்ரவரி முதல் அல்லது இரண்டாம் வாரத்தில் கரூர் சம்பவம் தொடர்பான விசாரணையின் அறிக்கையை நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரிகள் தாக்கல் செய்ய விருப்பதால் விசாரணை தீவிரமடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
About Writer
BALA
அடுத்த கட்டுரையில்
விஜயுடன் விசாரணை மேலும் நீடிக்க வாய்ப்பு!.. விட மாட்டாங்க போல!...