திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 4 மே 2018 (16:19 IST)

காவிரி நமது உரிமை, பிச்சை கிடையாது - வேல்முருகன் ஆவேசம்

காவிரிக்காக இனியும் மடிப்பிச்சை ஏந்திக்கொண்டு இருக்காமல் தமிழர்கள் அனைவரும் போராட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
காவிரி விவகாரத்தில் மத்திய அரசு, வரைவு திட்ட அறிக்கையை மே 3ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 
 
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா உள்ளிட்ட மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு காவிரி வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. 
 
காவிரி வரைவு திட்டம் தயார் நிலையில் இருக்கிறது. ஆனால்,  பிரதமர், அமைச்சர்கள் ஆகியோர் கர்நாடக தேர்தல் பரப்புரையில் இருப்பதால் ஒப்புதல் பெற இயலவில்லை என மத்திய அரசு மீண்டும் காரணம் கூறியது.
 
ஆனால், இதை நீதிமன்றம் ஏற்கவில்லை. காவிரி நீர் விவகாரத்தில் அரசியல் காரணங்களை ஏற்க முடியாது என கருத்து தெரிவித்த நீதிபதிகள், தமிழகத்திற்கு இந்த மாதம் 4 டி.எம்.சி நீரை திறந்து விட வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை வரும் 8 ந் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.. உச்ச நீதிமன்ற எச்சரிக்கையை உதாசீனப்படுத்தும் வகையில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதுகுறித்து பேசிய தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் பாஜக, சித்தராமையா அரசு, உச்ச நீதிமன்றம் எல்லோருமே ஒன்று சேர்ந்து தமிழகத்திற்கு  துரோகமிழைக்கிறார்கள். கர்நாடகத்தினரிடம் மடிப்பிச்சை கேட்காமல் தமிழ்மண்ணின் தொன்றுதொட்ட இயற்கை உரிமையான காவிரியை மீட்க தமிழர்கள் அனைவரும் போராட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.