வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 3 மே 2018 (12:03 IST)

சுப்ரீம் கோர்ட் வளாக மரத்தில் ஏறி தமிழக விவசாயி போராட்டம்

காவிரி விவகாரம் குறித்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, எதிர்பார்த்தபடியே மத்திய அரசு மேலும் சுப்ரீம் கோர்ட்டில் அவகாசம் கேட்டது. சுப்ரீம் கோர்ட்டும் வரும் செவ்வாய்க்கிழமை வரைவு திட்டம் தொடர்பாக இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து வழக்கை ஒத்தி வைத்தது. மேலும் இன்னும் சில நாட்களில் சுப்ரீம் கோர்ட்டின் கோடை விடுமுறை ஆரம்பமாகிவிடும் என்பதால் மீண்டும் இந்த அமர்வு ஜூன் மாதம்தான் இந்த வழக்கை விசாரணை செய்யும் என்று கூறப்படுகிறது.
 
எனவே காவிரி விவகாரத்தில் மத்திய அரசும், சுப்ரீம் கோர்ட்டும் மென்மேலும் காலந்தாழ்த்தி வருவதை கண்டித்து அரியலூரை சேர்ந்த விவசாயி ஒருவர் சுப்ரீம் கோர்ட் வளாகத்தில் உள்ள ஒரு மரத்தின் மீது திடீரென ஏறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். அவரை மரத்தில் இருந்து இறங்க வைக்க சுப்ரீம் கோர்ட் காவலர்கள் முயற்சித்து வருகின்றனர்.
 
இந்த நிலையில் காவிரி வழக்கு தமிழக விவசாயிகளை வஞ்சித்து வருவதாக தமிழக அரசியல் தலைவர்கள் கருத்து கூறி வருகின்றனர். இதுகுறித்து தமாகா தலைவர் வாசன் கூறியபோது, 'காவிரி வழக்கில் விவசாயிகளை வஞ்சிக்கும் வகையில் மத்திய அரசு கால அவகாசம் கோரி உள்ளதாக தெரிவித்தார். காவிரி விவகாரத்தில் மத்திய அரசு ஒருதலைபட்சமாக செயல்படுவதாக வாதம் செய்ததாக அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார்.