1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வியாழன், 26 அக்டோபர் 2023 (14:08 IST)

தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம்- அன்புமணி ராமதாஸ்

Anbumani
தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என 44 ஆண்டுகளாக பாமக நிறுவனம் ராமதாஸ் போராடி வருவதாக அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஸ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் ஆட்சி நடந்து வரும் நிலையில், இம்மா நிலத்தில் சமீபத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதையடுத்து, மற்ற மாநிலங்களிலும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென பலரும் கூறி வருகின்றனர்.

இந்த  நிலையில், தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என 44 ஆண்டுகளாக பாமக நிறுவனம் ராமதாஸ் போராடி வருவதாக  பாமக தலைவரும் எம்பியுமான அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் கூறியுள்ளதாவது:

''அனைத்து சமுதாய மக்களின் நிலையை அறிய சாதிவாரி கணக்கெடுப்பு அவசியமாகும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மறுக்கும் ஆசியாளர்கள் சமூக நீதி பற்றி  பேசுவது ஏன்? மாநில அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் அனைத்து சாதியினரின் சமுதாய நிலையை அறியமுடியும். ஒட்டுமொத்த தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு இது அவசியம்'' என்று தெரிவித்துள்ளார்.