வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : திங்கள், 25 செப்டம்பர் 2023 (17:43 IST)

வட்டி கட்டாததால் பெண்ணை தாக்கி, சிறுநீர் குடிக்க வைத்த கொடூரர்கள்:

abuse
பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஸ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் ஆட்சி நடந்து வருகிறது.

இங்குள்ள பாட்னா மாவட்டத்தில் ரூ.900 கடனுக்கு ரூ.1500 வட்டி கட்டத் தவறியதால் பட்டியலின பெண்ணை தாக்கி சிறு நீர் குடிக்க வைத்த சம்பவம் நடந்துள்ளது.

ரூ.1500 வட்டி கட்ட தவறியதால் அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கடந்த 23 ஆம் தேதி இரவு காவல் நிலையத்திற்கு நேரில் வந்து எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளானர்.

இந்தச் சம்பவத்தில்  தலையில் காயமடைந்த பெண் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் மீது தாக்குதல் நடத்திய 6 பேரும் தலைமறைவாக  உள்ளதாக போலீஸார் தரப்பில் தெரிவித்துள்ளனர். அவர்களை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.