இன்றுடன் பிரச்சாரம் முடிவு.. கடைசி நாளில் தாராபுரத்தின் 30 இடங்களுக்கு செல்லும் முதல்வர் விஜய்...
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில், பிரச்சாரத்தின் கடைசி நாளான இன்று தமிழக முதல்வரும், தவெக தலைவருமான விஜய் 30 இடங்களில் மக்களை சந்தித்து வாக்கு சேகரிக்கின்றார்.
இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடையும் நிலையில், தாராபுரத்தின் மேட்டுக்கடை முதல் தாசர்புரம் வரை 114 கி.மீ தொலைவுக்கு இந்த பிரம்மாண்ட வாகன பிரச்சாரம் திட்டமிடப்பட்டுள்ளது.
மாருதி நகரில் மதியம் 1.00 மணிக்கு தொடங்கும் இந்த ரோடு ஷோவில், உடுமலைப்பேட்டை சாலை, காவல்நிலையம், ஐந்து சாலை சந்திப்பு, மூலனூர் உள்ளிட்ட முக்கியப் பகுதிகள் வழியாக சென்று, தவெக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு 'விசில்' சின்னத்தில் முதல்வர் வாக்கு சேகரிக்கவுள்ளார்.
பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, காவல் துறையின் வழிகாட்டு நெறிமுறைகள் கண்டிப்பாக பின்பற்றப்படும் என தவெக அறிவித்துள்ளது.
கர்ப்பிணிகள், சிறுவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் நேரடி பிரச்சாரத்தில் கலந்துகொள்வதை தவிர்த்து, தொலைக்காட்சி மற்றும் சமூக வலைத்தள நேரலைகள் வாயிலாக கண்டு ஒத்துழைப்பு தருமாறு அக்கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.

