வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 28 செப்டம்பர் 2018 (18:48 IST)

பழிதீர்க்கவா? அவதூறு பேச்சு சிக்கலில் திமுகவின் ஆர்.எஸ் பாரதி

திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஆளும் அமைச்சர்களை அவதூறாக பேசியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 
கோவையில் அதிமுக அரசு பதவி விலகக்கோரி திமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் ஆர்.எஸ்.பாரதி, மற்றும் சில எம்பி, எம்எல்ஏ-க்கள், திமுக தொண்டர்கள் பங்கேற்றனர். 
 
அப்போது கூட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி முதல்வரையும் அமைச்சர்களையும் அவதூறாக பேசியதாக பேரூர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில், ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதியப்பட்டுள்ளது. 
 
ஆர்.எஸ் பாரதி, முதல்வர் மீதும் துணை முதல்வர் மீதும் ஏற்கனவே ஊழல் வழக்குகளை தொடுத்துள்ளார். மேலும், பல அமைச்சர்கள் மீதான புகார்களையும் தீவிரமாக கண்கானித்து வழக்கு தொடர்கிறார். 
 
எனவே, இதற்கு பழி தீர்க்க அரசியல் காழ்ப்புணர்வோடு ஆர்.எஸ் பாரதி மீது வழக்கு போடப்பட்டுள்ளது என திமுக தரப்பில் கூறப்படுகிறது.