கார் டயர் வெடித்து விபத்து 5 பேர் படுகாயம் : பதறவைக்கும் வீடியோ காட்சி
தேனி மாவட்டத்திலுள்ள ஆண்டிப்பட்டியில் ஒரு அலுவலகத்துக்கு முன்னர் ஊழியர்கள் அனைவரும் பேசிக்கொண்டு நின்றிருந்தனர்.அப்போது அவ்வழியே வந்த ஒரு காரின் சர்க்கரம் திடீரென்று வெடித்தது. இதில் 5 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
தேனி மாவட்ட, ஆண்டிபட்டி அருகே உள்ள ஒரு அலுவலகத்தில் மாலை நேரத்தின் போது, அலுவலக் உழியர்கள் நின்று பேசிக்கொண்டு கிளம்ப தயாரான போது, அவ்வழியே வந்த ஒரு காரின் சர்க்கரம் திடீரென்று வெடித்து தாறுமாறாக வேகத்தில் வந்து, அங்கு நின்றிருந்த அலுவவர்கள் மீது மோதியது. இதில் சார் ஆய்வாளர் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதுகுறித்த வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.