புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 1 ஜூலை 2019 (15:33 IST)

அமமுக உருவாகியே இருக்க கூடாது: தங்க தமிழ்ச்செல்வன் தடாலடி!

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியே உருவாகியிருக்கக் கூடாது என்று தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். 
 
டிடிவி தினகரனுடன் ஏற்பட்ட மனகசப்பால் அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார் தங்க தமிழ்ச்செல்வன். அதிமுகவை பாஜக இயக்கி வருவதால் மானம்கெட்டுப் போய் அக்கட்சியில் இணைய முடியாது எனவும் குறிப்பிட்டிருந்தார். 
 
இந்நிலையில், தேனி மாவட்டம் கம்பத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியே உருவாகியிருக்கக் கூடாது என்று தெரிவித்தார். 
 
அதோடு, விரைவில் ஸ்டாலின் தலைமையில் போடியில் கூட்டம் நடத்தி, அதிமுக மற்றும் அமமுகவில் உள்ள தனது ஆதரவாளர்களை அழைத்து வந்து திமுகவில் இணைக்கவுள்ளதாகவும் தங்க தமிழ்ச்செல்வன் பேட்டியளித்துள்ளார்.