வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 22 ஜூலை 2019 (09:34 IST)

தாய்கழகமான திமுகவுக்கு வாருங்கள் – அதிமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள் !

தேனியில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு பேசிய திமுக தலைவர் ஸ்டாலின் அதிமுகவில் இருக்கும் உண்மையான தொண்டர்கள் திமுகவுக்கு வரவேண்டும் எனக் கூறியுள்ளார்.

சமீபத்தில் தினகரனின் அமமுகவில் இருந்து திமுகவில் இணைந்த தங்கதமிழ்செல்வன் ஏற்பாடு செய்த இணைப்பு விழா நேற்று தேனியில் நடைபெற்றது.  இந்த விழாவில் தங்க தமிழ்ச்செல்வனின் ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலக் கட்சிகளில் இருந்து விலகிய தொண்டர்கள் திமுகவில் இணைந்தனர். இந்த விழாவில் திமுக தலைவர் முக ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். 

அப்போது ‘ஜெயலலிதாவையும், எம்.ஜி.ஆரையும் மறந்தவர்கள் தான் இன்று முதல்வராகவும் துணை முதல்வராகவும் உள்ளனர். இப்போது அதிமுகவின் உண்மையானத் தலைவர்கள் அமித்ஷாவும், மோடியும்தான். பணத்திற்காகவும் பதவிக்காகவும் அடிமைகளாக இருப்பவர்களின் ஆட்சியாகத்தான் அதிமுக ஆட்சி இருந்துகொண்டிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் இன்றைக்கும் அதிமுகவில் உண்மையாக உழைத்துக்கொண்டிருக்கும் விசுவாசிகள், தொண்டர்கள் அங்கு இருப்பதில் நியாயமில்லை. உங்களுடைய இயக்கம் திராவிட இயக்கமாக இருக்கும் திமுகதான். இந்தக் கூட்டத்தின் மூலமாக அவர்களையும் திமுகவுக்கு அழைக்க நான் விரும்புகிறேன்’ எனக் கூறியுள்ளார்.