1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 11 ஜூலை 2019 (18:53 IST)

தேனியில் நியூட்ரினோ ஆய்வு மையம்: மத்திய அரசு ஒப்புதல்

கூடங்குளம் அணு உலை, மீத்தேன் திட்டம், நெடுவாசல், ஹைட்ரோகார்பன், எட்டு வழிச்சாலை உள்பட பல மத்திய அரசின் திட்டங்களுக்கு எதிராக தமிழக அரசியல் கட்சிகளும் தமிழக மக்களும் போராடி வரும் நிலையில் தற்போது தமிழகத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது
 
இந்தியாவில் முதல் முறையாக அமைக்கப்படும் நியூட்ரினோ மையம் தமிழகத்தில் தேனி மாவட்டம் பொட்டிப்புரத்தில்  அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு அமைச்சர் ஜிதேந்திரசிங் எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்கையில் நியூட்ரினோ ஆய்வு மையத்தால் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் இந்த திட்டத்தால் கதிர்வீச்சு அபாயமும் ஏற்படாது என்றும் கூறினார்
 
இந்த திட்டத்திற்கும் தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பும் என்றும் போராட்டங்கள் அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கருதப்படுகிறது. இந்த அறிவிப்பு வெளியான ஒருசில நிமிடங்களில் மே 18 இயக்கத்தில் திருமுருகன் காந்தி தனது டுவிட்டரில், 'தேனிப்பகுதி மக்கள் மட்டுமல்லாது தமிழகத்தின் எதிர்ப்பை மீறி மேற்குதொடர்ச்சி மலையின் சூழலியலை பாதிக்கும் விதமாக 'நியூட்ரினோ திட்டத்திற்கு' மத்திய அரசு அனுமதியளித்திருப்பது தமிழின விரோத நிலைப்பாடு மட்டுமல்ல, சனநாயக விரோத செயலாகும் என்று தெரிவித்துள்ளார்.