எனக்கு ஓட்டு போட வேண்டாம் என பிரச்சாரம் செய்த வேட்பாளருக்கு 24 ஓட்டுக்கள்!
தமிழகத்தில் அக்டோபர் 6 மற்றும் 9 தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது என்பதும் இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டு கொண்டிருக்கின்றன என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் இந்த தேர்தலில் பல வினோதமான சம்பவங்கள் நடந்தன. ஒரே ஒரு ஓட்டு மட்டும் பெற்ற வேட்பாளர், ஒரு ஓட்டு கூட பெறாத வேட்பாளர், அனைத்து சின்னத்திலும், வாக்கு செலுத்திய வாக்காளர், வாக்கு செலுத்திவிட்டு வாக்குச்சீட்டை கையோடு கொண்டு வந்த வேட்பாளர் என பல வினோதங்கள் நடந்தன
அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட ரமேஷ் என்பவர் தனது யாரும் ஓட்டுப் போட வேண்டாம் என்று தேர்தல் பிரசாரம் செய்தார். இருப்பினும் அவருக்கு இருபத்தி நான்கு ஓட்டுக்கள் கிடைத்துள்ளன யாரும் ஓட்டுப் போட வேண்டாம் என்று கூறியும் தனது 24 ஓட்டுக்கள் கிடைத்துள்ளதை அறிந்து அந்த வேட்பாளர் ஆச்சரியம் அடைந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது