1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. AMMK candidate not even a single vote

ஒரு ஓட்டு கூட பெறாத அமமுக வேட்பாளர்!

பாஜக
ஒருபக்கம் பாஜக வேட்பாளர் ஒருவர் ஒரே ஒரு ஓட்டு மட்டுமே பெற்றதை அடுத்து ’ஒத்த ஓட்டு பாஜக’ என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது 
 
இந்த நிலையில் அமமுகவை சேர்ந்த வேட்பாளர் ஒருவர் அந்த ஒரு ஓட்டு கூட பெறாத நிலை ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்தில் 10 வது வார்டில் போட்டியிட்டு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவர் ஒரு ஓட்டு கூட வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
அவர் தன்னுடைய வார்டில் போட்டியிடாமல் வேறொரு வார்டில் போட்டியிட்டதால் அவர் தனது ஓட்டையும் தனது குடும்பத்தினர் வாழ்க்கையை ஓட்டையும் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
 
அதேபோல் கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் தேமுதிகவை சேர்ந்த வேட்பாளர் ஒருவர் இரண்டு ஓட்டு மட்டுமே பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
About Writer
siva