செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 12 அக்டோபர் 2021 (18:12 IST)

விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த 49 பேர் தேர்தலில் வெற்றி: புஸ்ஸி ஆனந்த் தகவல்

நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த 49 பேர் வெற்றி பெற்றுள்ளதாக விஜய் மக்கள் இயக்கத்தின் அகில இந்திய தலைவர் புஸ்ஸி ஆனந்த் அவர்கள் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
அக்டோபர் 6 மற்றும் அக்டோபர் 9 ஆகிய இரண்டு தினங்களில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன என்பதும் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன என்பதும் தெரிந்ததே. இந்த தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று வருகிறது என்பதும் அதிமுக படுதோல்வியை சந்தித்து வருகிறது என்பதையும் தேர்தல் முடிவில் இருந்து தெரியவருகிறது. 
 
இந்த நிலையில் இந்த தேர்தலில் 169 விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் போட்டியிட்டதாகவும் அதில் 36 பேர் வெற்றி பெற்றுள்ளதாகவும் 13 பேர் போட்டியின்றி வெற்றி பெற்றதாகவும் ஆக மொத்தம் 49 பேர் வெற்றி பெற்றுள்ளதாக புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார் 
 
இதனை அடுத்து திமுக அதிமுகவை அடுத்து மூன்றாவது பெரிய கட்சியாக விஜய் மக்கள் இயக்கம் உருவாகி இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.