வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 12 அக்டோபர் 2021 (18:12 IST)

ஒரே ஒரு ஓட்டு பெற்றவர் பாஜக வேட்பாளர் இல்லை: காயத்ரி ரகுராம்

நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒன்றிய வார்டு கவுன்சிலராக போட்டியிட்ட பாஜக வேட்பாளர் கார்த்திக் என்பவர் ஒரே ஒரு ஓட்டு மட்டுமே பெற்றதாக வெளியான செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 
 
இதனை அடுத்து ’ஒத்த ஓட்டு பாஜக’ என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் வைரலனது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஒரே ஒரு ஓட்டு மட்டுமே பெற்ற வேட்பாளர் பாஜக வேட்பாளர் இல்லை என்றும் அவர் தனது வேட்பு மனு தாக்கல் செய்யும்போது சுயேச்சை வேட்பாளர் என்றுதான் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார் என்றும் பிரபல அரசியல் விமர்சகர் சுமந்த் தெரிவித்துள்ளார் 
 
அவருடைய இந்த டுவிட்டை நடிகையும் பாஜக பிரபலமுமான காயத்ரி ரகுராம் ரீட்வீட் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இது ஒரு ஆதாரத்தையும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து ஒரு ஒரே ஒரு ஓட்டு மட்டுமே பெற்ற வேட்பாளர் சுயத்தை வேட்பாளர் என்பது உறுதியாகியுள்ளது