வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 3 ஜனவரி 2020 (15:30 IST)

குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர் – உள்ளாட்சி தேர்தல் ருசிகரம் !

உள்ளாட்சித் தேர்தலில் வார்டு உறுப்பினருக்கு போட்டியிட்ட இரு வேட்பாளர்கள் சமமான வாக்குகள் பெற்றதால் அவரில் ஒருவர் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அரியலூர் மாவட்டம் குருவாலப்பர்கோவில் ஊராட்சியில் வார்டு எண் 9 க்கு ரம்யா(கட்டில்), ராஜலட்சுமி(சீப்பு), சுகந்தி(திறவுகோல்) ஆகிய மூவரும் போட்டியிட்டனர். மொத்தம் பதிவான 294 வாக்குகளில் சுகந்தி 64 வாக்குகளும், ரம்யா 112 வாக்குகளும், ராஜலட்சுமி 112 வாக்குகளும் பெற்றனர். 6 ஓட்டுகள் செல்லாத ஓட்டுகளாக அறிவிக்கப்பட்டது. இரு வேட்பாளர்கள் சமமான வாக்குகள் பெற்றதால் வெற்றியை நிர்ணயிக்கும் சக்தியை தபால் ஓட்டுகள் பெற்றன.

இதையடுத்து நேற்றிரவு எண்ணப்பட்ட தபால் வாக்கிலும் இருவரும் தலா  வாக்குகள் பெற்றதால் மீண்டும் குழப்பம் உண்டானது. இதன் பின்னர் இன்று காலை வட்டார ஆட்சியர் இருவரின் சம்மதத்துடன் குலுக்கல் முறையில் வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும் முடிவை எடுத்தார்.

குலுக்கல் முறையில் ரம்யா என்ற வேட்பாளரின் பெயர் வர அவரையே வெற்றி பெற்ற வேட்பாளராக அறிவித்தார்.