புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 3 ஆகஸ்ட் 2019 (10:16 IST)

பரபர வேலூர் தேர்தல்களம் – பிரச்சாரம் இன்றோடு முடிவு !

வேலூர் மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் முடியவுள்ளது.

பணப்பட்டுவாடாக் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் நடக்க இருந்த மக்களவைத் தேர்தலில் வேலூர் தொகுதிக்கு மட்டும் ரத்து செய்யப்பட்டது.  இதையடுத்து 4 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. இதில் திமுக, அதிமுக மற்றும் நாம் தமிழர் ஆகிய 3 கட்சிகளும்  முன்னர் அறிவித்த வேட்பாளரையே மீண்டும் களத்தில் இறக்கியுள்ளனர்.

இது தவிர சுயேட்சை வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். மற்ற பெரியக் கட்சிகளான ம.நீ.ம , அமமுக ஆகிய கட்சிகள் போட்டியில் இருந்து விலகியுள்ளனர். இதையடுத்து கடந்த சில வாரங்களாக நடந்து வந்த தேர்தல் பிர்ச்சாரம் இன்று மாலையுடன் முடியவுள்ளது.
இதையடுத்து ஆகஸ்ட் 5 ஆம் தேதி வாக்குப்பதிவும் ஆகஸ்ட் 9 ஆம் தேதி தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட உள்ளன.