ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By

வேலூர் தேர்தல்: ஒற்றுமையுடன் கரன்ஸி சப்ளை செய்யும் திராவிட கட்சிகள்!

வேலூர் மக்களவைத் தேர்தல் வரும் 5ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அங்கு தேர்தல் பிரச்சாரம் உச்சக்கட்டத்தில் உள்ளது. குறிப்பாக அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்களுக்கு இடையேயான போட்டி கடுமையாக உள்ளது.
 
கடந்த மே மாதம் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் திமுக பெருவாரியான வெற்றியைப் பெற்ற நிலையில் இந்த ஒரு தொகுதியில் கண்டிப்பாக வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் அதிமுக உள்ளது. எனவே வேலூர் தொகுதியில் கரன்ஸி தண்ணிராக செலவு செய்யப்படுவதாக கூறப்படுகிறது. திமுகவும் அதிமுகவுக்கு சளைத்தது அல்ல என்பது போல் கரன்ஸி விஷயத்தில் இம்முறை தாராளம் காட்டி வருவதாக தெரிகிறது 
 
மேலும் உள்ளூர் அதிமுக, திமுக வினர் கரன்சி சப்ளை செய்யும் விஷயத்தில் ஒற்றுமையுடன் நடந்து கொள்வதாக செய்திகள் வந்துள்ளது. அதாவது ஒரு பகுதியில் காலையில் அதிமுகவினர் கரன்சி கொடுத்தால், மாலையில் திமுகவினர் கரன்சியை கொடுப்பதாகவும் அதேபோல் மற்றொரு பகுதியில் காலையில் திமுகவினர் கரன்சி கொடுத்தால் மாலையில் அதிமுகவினர் கரன்ஸி கொடுப்பதாக ஒரு ஜெண்டில்மென் ஒப்பந்தம் செய்து கொண்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன
 
வேலூரில் கடந்த மே மாதம் தேர்தல் நிறுத்தப்பட்டதற்கு முக்கிய காரணம் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டு தான். ஆனால் இம்முறையும் அதே தவறு நடந்து கொண்டிருந்தாலும் தேர்தல் ஆணையம் கண்டு கொள்வதில்லை என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளும் மாறி மாறி வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வருவதால் இந்த தொகுதியில் வெற்றி யாருக்கு என்பது கேள்விக்குறியாக இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்