ஆடிப்பெருக்கை முன்னிட்டு தண்ணீர் திறப்பு – மகிழ்ச்சியில் மக்கள்

aadi peruku
Last Modified வியாழன், 1 ஆகஸ்ட் 2019 (13:13 IST)
ஆடிப்பெருக்கு திருவிழாவை முன்னிட்டு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

ஆடி மாதம் 18ம் நாள் தமிழகமெங்கும் ஆடிப்பெருக்கு கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். அன்றைய நாளில் மக்கள் புனித தலங்களுக்கு சென்று வழிபட்டு, நீர்நிலைகளில் நீராடுவர். தமிழகமெங்கும் ஆறுகள் வறண்டு கிடப்பதால் ஆடிப்பெருக்கு விழாவை எப்படி கொண்டாடுவது என மக்கள் சோகத்தில் இருந்தனர்.

தற்போது மேட்டூர் அணையில் கணிசமான அளவு நீர் இருப்பதால் ஆடிப்பெருக்கில் மக்கள் நீராட வசதியாக தண்ணீர் திறந்துவிட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இந்த அறிவிப்பினால் மக்கள் மகிழ்ச்சியோடு ஆடிப்பெருக்கை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.இதில் மேலும் படிக்கவும் :