1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. camp in chennai for ration card tomorrow

நாளை ரேஷன் கார்டு குறைதீர் முகாம்!

ரேஷன் கார்டு குறைதீர் முகாம்
மே மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோக திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் நாளை நடைபெறவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் நாளை மே மாதத்திற்கான ரேஷன் கார்டு குறைதீர் முகாம் நடைபெறுகிறது. சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் நாளை காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை இந்த குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது.
 
இந்த முகாம் மூலம் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு / மாற்றம் செய்தல் மற்றும் புதிய குடும்ப அட்டை / நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்களைப் பதிவு செய்தல் ஆகிய சேவைகள் மேற்கொள்ளப்படும். 
 
மேலும் இந்த முகாமை குடும்ப  அட்டைதாரர்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு அரசு தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
ஆட்டோ கட்டணங்கள் உயர்கிறதா? 2வது நாளாக ஆலோசனை!