செவ்வாய், 30 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Updated : வியாழன், 2 ஜனவரி 2020 (16:35 IST)

திமுக முன்னிலை... ஆனால் வெற்றியை தடுக்கிறார்கள் - ஸ்டாலின் குற்றச்சாட்டு

உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று பல்வேறு குழப்பங்களுக்கு இடையே தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தேர்தல் முடிவுகளை கூட அறிவிக்காமல் இருக்கிறார்கள் என ஸ்டாலின் குற்றம்சாட்டி இதுகுறித்து, தேர்தல் ஆணையத்திடம் அவர் புகார் முறையீடு செய்துள்ளார்.
சென்னை கோயம்பேட்டில் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமியிடம் புகார் அளித்த பின், ஸ்டாலின் செய்தியாளார்களிடம் கூறியுள்ளதாவது :
 
அதிகாரிகள்,காவல்துறையினர் துணையோடு திட்டமிட்ட சதிசெய்து திமுகவின் வெற்றியை தடுக்க முயற்சி  செய்து வருகின்றனர். எடப்பாடியில் எண்ணி முடிக்கப்பட்டு அறிவிக்கப்பட வேண்டிய முடிவுகளை அறிவிக்காமல் உள்ளனர். ஏறக்குறைய 80 % க்கும் மேற்பட்ட இடங்களில் திமுக கூட்டணி முன்னணியில் இருக்கிறது.
 
விளாத்திக்குளத்தில் மூன்று வாக்குப் பெட்டிகளை காணவில்லை  எனவும், எடப்பாடி, சங்ககிரி உள்ளிட்ட இடங்களில் திமுக முன்னிலை வகிக்கிறது. ஆனால் வெற்றியை அறிவிக்கவில்லை என கூறினார்.
 
 மேலும், தேர்தல் ஆணையத்தில் வந்து உண்ணாவிரதம் இருப்பதா அல்லது மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்துவதா என்பது பிறகு முடிவு செய்யப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.