1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Bus bookings for Deepavali starts tomorrow

தீபாவளி பஸ் டிக்கெட் முன்பதிவு நாளை துவக்கம்

Deepavali
தீபாவளிக்கு வெளியூர் செல்ல விரும்பும் பயணிகள் நாளை முதல் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிப்பு. 
 
தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் அதாவது நவம்பர் 4 ஆம் தேதி (வியாழக்கிழமை) வருகிறது. இதனால் சென்னையில் வசிக்கும் வெளியூரை சேர்ந்தவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிடுவர். 
 
எனவே இவர்களுக்கு வசதியாக தீபாவளிக்கு வெளியூர் செல்ல விரும்பும் பயணிகள் நாளை முதல் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அரசு போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது. 
 
தீபாவளி பண்டிகைக்கு கடந்த ஆண்டு சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இதே இம்முறையும் இயக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 
அடுத்த கட்டுரையில்
விற்பனைக்கு வந்த மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோ!!