1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 1 அக்டோபர் 2021 (19:19 IST)

தீபாவளிக்கு மோதும் நான்கு படங்கள்: எவை எவை தெரியுமா?

தீபாவளிக்கு மோதும் நான்கு படங்கள்: எவை எவை தெரியுமா?
வரும் தீபாவளி அன்று நான்கு திரைப்படங்கள் ரிலீஸ் ஆவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த படங்களில் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்த மிகப்பெரும் படம் எது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் 
 
வரும் தீபாவளியன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த திரைப்படம் ரிலீஸ் ஆக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் சிம்பு நடித்துள்ள மாநாடு திரைப்படம் மற்றும் விஷால் நடித்துள்ள எனிமி திரைப்படம் மற்றும் அருண் விஜய் நடித்துள்ள வா டீல் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
ஒரே நேரத்தில் நான்கு பிரபல நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகும் நிலையில் திரையரங்குகள் பிரித்து தான் கொடுக்கப்படும் என்பதும் குறிப்பாக ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்திற்கு அதிக திரையரங்குகள் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது
 
இருப்பினும் தீபாவளி அன்று வெளியாகும் திரைப்படத்தின் வசூலில் முதல் திரைப்படம் எது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்