வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 10 ஜனவரி 2024 (08:00 IST)

எருமை மாடு முட்டியதில் முதியவர் பரிதாப பலி.. சென்னையில் மேலும் விபரீதம்..!

சென்னையில் தெருக்களில் மாடுகள் சுற்றி தெரிவதால் ஏற்கனவே சிலர் உயிரிழந்ததாகவும் பல காயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியான நிலையில் தற்போது முதியோர் ஒருவர் மாடு முட்டியதால் உயிரிழந்த சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
சென்னை நங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர் என்ற 63 வயது நபர் நேற்று மாலை சாலையில் நடந்து சென்று கொண்டபோது திடீரென இரண்டு எருமை மாடுகள் சண்டை போட்டபடி ஓடி வந்து அவரை முட்டின. 
 
இதனால் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்து விட்டதாக தெரிகிறது. நங்கநல்லூர் பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக மாடுமுட்டி காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக வாகன ஓட்டிகளுக்கு பெரும் இடையூறாக மாடுகள் உள்ளன.

 
கால்நடைகளை தெருவில் சுற்றி தெரிய விடக்கூடாது என கால்நடை உரிமையாளர்களுக்கு ஏற்கனவே எச்சரிக்கை விடப்பட்ட போதிலும்  அந்த எச்சரிக்கையை யாரும் கண்டு கொள்வதில்லை. 
 
இந்த நிலையில் எருமை மாடு முட்டி முதியவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva