1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 10 ஜனவரி 2024 (07:49 IST)

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் திடீர் ராஜினாமா! என்ன காரணம்?

திமுக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் ஆர் சண்முகசுந்தரம் அவர்களை தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக நியமனம் செய்த நிலையில் தற்போது அவர் திடீரென ராஜினாமா செய்திருப்பது பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஆர் சண்முகசுந்தரம் தனது பதவியை ராஜினாமா செய்வதாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களிடம் தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பே அவர் இந்த முடிவை முதல்வரிடம் தெரிவித்ததாகவும் ஆனால் முதல்வர் தான் சிறிது காலம் தாமதிக்குமாறு கேட்டுக் கொண்டதாகவும் தெரிகிறது.

இந்த ராஜினாமா முடிவிற்கு என்ன காரணம் என்று அவர் இதுவரை வெளியே செல்லவில்லை என்றும் வழக்கம் போல் தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா செய்வதாக அவர் கூறியிருப்பதாகவும் கூறப்படுகிறது.  

ஏற்கனவே 1989-91 திமுக ஆட்சியின் போது அவர் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக இருந்த நிலையில் தற்போது மீண்டும் ஆட்சியைப் பிடித்த பிறகு தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட நிலையில் திடீரென அவர் ராஜினாமா செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  


Edited by Siva